அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 16ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதாகவும், சுய பரிசோதனை முறைகளால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக விக்டோரியா மாகாணத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடும் கட்டுபாடுகளை அமுல்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.