ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில நடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட ஈடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானின் மேற்கு மாகாணமான பட்கிஸ்சில் மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்குள் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. துர்க்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
https://www.aljazeera.com/news/2022/1/17/earthquake-hits-western-afghanistan-killing-more-than-20