ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட மகளிர் சிறை இயக்குனரான அலியா அஸிசியை விடுவிக்கக் கோரிய பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹசாரா இன பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரங்களை கைவிடுமாறும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் விரட்டியுள்ளது.