இலங்கை மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டொன் டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையில் மின் துண்டிப்புக்கு முழுமையான தீர்வு இன்னும் கிடைக்காமலே உள்ளது.