இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மேலும் இலங்கையின் வர்த்தகம், சுகாதாரம், மருந்துகள், கட்டுமானம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இதன்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.