இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாணந்துரை பிரதேசத்தின் பிரபல பாடசாலை அதிபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக் கொள்வதற்காக இவர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளார்.இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைகுழு மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)