எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில், பன்னாட்டு நெடுஞ்சாலையில் நேற்று (08) அதிகாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எகிப்தின் சாலைகளில் கடந்த 2020 ஆண்டு விபத்துகளில் சிக்கி 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.