நேற்றைய தினம் (31) நாட்டில் இனம் காணப்பட்ட 41 புதிய ஒமிக்ரோன். கொற்றாளர்களுடன் சேர்த்து மொத்த ஓமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் இனம் காணப்பட்ட ஓமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீஜயவர்தன்புர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவிக்கையில், இவ்வாரம் முன்னெடுக்கப்பட்ட 176 மாதிரிகளின் பரிசோதனைகளில் 41 ஓமிக்கிரோன் தொற்றாளர்கள் புதிதாக இனம் காணப்பட்டனர். விமான நிலையத்திலும் மற்றும் மினுவாங்கொடை பிரதேசத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட 4 மாதிரிகளில் இருந்து இவை இனங்காணப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்னார்.
ஓமிக்ரோன் தொடர்பான பதிய ஆய்வுகளின் மூலம் அது நோய் அறிகுறியின்றி பரவக்கூடியது என இனம் காணப்பட்டுள்ளது ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து இரு தினங்களின் பின்னர் ஏனையோருக்குப் பரவக் கூடியது.அதேபோன்று தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு இரு தினங்களின் பின்னர் வைரஸானது தொற்றாளரின் உடம்பிலிருந்து வெளியேறும் வீதமும் குறைவடைவது அதன் இயல்பாகும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பிரதான பிறழ்வாக டெல்டா பிறழ்வே காணப்படுகிறது. இந்த வாரம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 176 மாதிரிகளில் 41 ஓமிக்ரோன் தவிர்ந்த ஏனையவை அனைத்தும் டொல்டா பிறழ்வுகளாகும்.