உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கடந்த வருடம் சுமார் 30,000 இலங்கையர்கள் கட்டாருக்கு வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 27,000 பேர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர், 2021 இல் கிட்டத்தட்ட 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.1,600 நபர்கள் சைப்ரஸுக்குச் சென்றுள்ளதாகவும், 1,400 பேர் தென் கொரியாவிற்குச் சென்றுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மொத்தமாக 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் 53,713 நபர்களாக இலங்கையின் வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு ஆண்டுக்கு ஆண்டு (YoY) 73.6 வீதத்தால் வெகுவாகக் குறைந்துள்ளது.