அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோ, தனது சுயசரிதை மூலம் புகழ்பெற்றார். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புத்தகத்தில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அது சார்ந்த தாக்கம் குறித்தும் விரிவாக பதிவு செய்திருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு, தனது 86-வது வயதில் அவர் காலமானார். இந் நிலையில், மாயா ஏஞ்சலோ நினைவாக, அரை டொலர் மதிப்பிலான நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.