களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்!

Date:

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் இயந்திரம் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (19) மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...

22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...