கானாவில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது; இதுவரையில் 17 பேர் பலி!

Date:

ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.இதில் லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச்சிதறி பயங்கர வெடி விபத்து நேரிட்டதன் காரணமாக அக்கம்பக்கம் இருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.பெரிய கட்டடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/20/ghana-police-report-huge-explosion-near-mines-in-west&ved=2ahUKEwiNk7zxnsL1AhXk8XMBHQkgB3IQFnoECCQQAQ&usg=AOvVaw0t8EGow_6QH8ch5eGoRlRf

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...