முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் ‘சந்திரிகா’ நேற்று (14) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
தரிந்து தொட்டவத்த இந்த நூலை எழுதியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.