சீனாவில் கட்டுமானப் பணியின் போது திடீர் நிலச்சரிவு;14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Date:

சீனாவின் குய்சோவ் மாகாணத்தின் பிஜி நகரில், கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு கட்டுமான தொழிலாளர்கள் 17 பேர் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், 14 பேரை சடலமாக மீட்டுள்ளனர்.

படுகாயங்களுடன்மீட்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் பிஜி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://www.aljazeera.com/news/2022/1/4/several-killed-in-chinese-construction-site-landslide

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...