சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.சுயாதீன தொலைக்காட்சியில் தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன சிறந்த செய்தி வாசிப்பாளராகவும்,செய்தி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதையும் வென்றுள்ளார்.சுயாதீன தொலைக்காட்சி ஊடகவலையமைப்பின் வரலாற்றில் சுயாதீன தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இவர் மிக இள வயது தலைவராகும்.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் கீழ் வசந்தம் வானொலி,வசந்தம் தொலைக்காட்சி,லக்ஹன்ட வானொலி என்பன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.சுயாதீன தொலைக்காட்சி ஊடகவலையமைப்பின் புதிய தலைவருக்கு வாழ்த்துக்கள்.