சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான முக்கிய கூட்டமொன்று ராஜகிரியவிலுள்ள பசுமை வியசாய செயல்பாட்டு மையத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உயிரியல் மற்றும் சேதன பசளை உற்பத்தி வழங்குனர்களால் முன்மொழியப்பட்ட மாவட்ட அடிப்படையினலான செயன்முறைகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டதோடு, சிறுபோகத்திற்கான வீதி வரைப்படம் தொடர்பிலும் கேள்வி மனு அறிவிப்புக்கள் மற்றும் சிறந்த வகையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.