நாட்டின் ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு!

Date:

கடந்த 2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக பொருள்கள் ஏற்றுமதியில் ஈட்டப்படும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எல்லையை தாண்டி 2021 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கை விட அதிகமாகும் எனவும் 2020 உடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாதாந்திர வர்த்தக ஏற்றுமதி வருமானம் பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஊடாக 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்தமை குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விசேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...