நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் மின் தடை அமுல்!

Date:

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல தடவைகள் தடைப்பட்டது.அதேநேரம்,இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...