நாட்டில் கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்ட மறுசீரமைப்பு மற்றும் சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.