நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

Date:

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்ததால் நாட்டில் மின் தடை ஏற்பட்டது.

இந் நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும்,எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தேவையான மின்சாரம் தொடர்பில் மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இத் தேவையினை தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக அல்லது தனியார் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் பூர்த்தி செய்வது குறித்து இதன் போது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...