இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதால் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக ஜனவரி 16 ஆம் திகதி பல்லேகலையில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்தவுள்ளார்.அவிஷ்க பெர்னாண்டோ அணியில் இல்லாததால், குசல் மெண்டிஸ் திரும்ப அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மீதான தடையை நீக்கியதை அடுத்து குசல் மெண்டிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.