பவள விழா காணும் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம்- அரனாயக (1947-2022)!

Date:

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் அரனாயக பிரதேச சபைக்கு உட்பட்ட தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம் தனது 75 ஆம் அகவையில் காலடி வைத்து பவள விழாவை இன்று (31) கொண்டாடியது.

பாடசாலையின் அதிபர் C.M.S. மஹ்பூப் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் மதிப்பிற்குரிய கனக ஹேரத் அவர்களும் மேலும் மாவனெல்லை கல்விப் பணிமனையின் அதிகாரிகளும் , பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் வைபவம் இன்று (31) ஆம் திகதி சுகாதார வழிமுறைகளை தழுவியதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் பிரதி அதிபர்கள் ,உப அதிபர்கள்,ஆசிரியர்கள் ,பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், ஊர் மக்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரினதும் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

1947.02.03 திகதி 70 மாணவர்களுடன் ஒரு ஓலைக் குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட தல்கஸ்பிட்டி மு.மா.வி இன்று பல வளர்ச்சிப்படிகளை கண்டு வலய மட்டத்திலும் ,தேசிய மட்டத்திலும் பல சாதனை மாணவர்களை உருவாக்கி தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பாடசாலையின் அதிபர் C.M.S மஹ்பூப் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகையில்,

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பவள விழா வைபவம் குறிப்பிட்ட எல்லைக்குள் நடத்தப்பட்டாலும் பவள விழாவை அடியொட்டிய செயற்திட்டங்கள் இவ் வருடம் முழுவதுமாக நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இப் பாடசாலையை சகல துறைகளிலும் சம்பூரணமான பாடசாலையாக மாற்றியமைப்பதில் தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்ளும் அவாவுடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் பவள விழா வைபவத்தில் பாடசாலைக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட 328 பேர்ஷஸ் நிலம் விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கான அங்குரார்ப்பணமும், தல்கஸ்பிடிய ஜும்மா மஸ்ஜித்துக்குரிய 17 பேர்ஷஸ் நிலம் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டதும் ,பவள விழா நினைவு தூபி திரை தூபி திரை நீக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...