பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன்13 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.அதன் போது, அவர் முறையான சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருந்தார். பின்னர் லங்கன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்தார்.தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரில் கியோட்டோ கிலேடியேடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.எனினும் தற்போது அவருக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.