பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மத் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.2003 இல் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.
கடந்த நவம்பரில் T20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் போட்டி, அவரது கடைசி ஆட்டமாக மாறியது.ஹபீஸ் 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 119 T20 போட்டிகளில் விளையாடி 12,780 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.