கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவும் இன்றைய தினத்திலும் (03) வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பொய் பிரசாரங்களை பிரதமர் ஊடக பிரிவு நிராகரித்துள்ளது.
பிரதமர் ஊடக பிரிவு.