பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட ஆய்வுகூடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரினால் திறந்து வைப்பு!

Date:

பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் ஆய்வுகூடம் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் பிரகாரம் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதும் அல்லது திறப்பதும் என்பது முற்றிலும் அரசியல் இலாபத்திற்காகவே என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும்,இவ் நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைப் பெற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

பல்வேறு கருத்தியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உரையாற்றும் போது;

“இன்று நான் இந்த வாய்ப்பை சர்வ கட்சிகளின் மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதையும் புகழும் மூங்கில் போன்றது என தலைமை தேரர் ஒருவர் கூறிய வதனம் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.கடமைகளை சரிவர நிறைவேற்றுவது மிக முக்கியமான பணியாகும். இஸ்லாத்தில் குறிப்பிடுவது போன்று இறைவனுக்கு மிக நெருங்கிய மனிதர் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியவர் என்பதாகும்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...