முஸ்லிம் பெண்களின் படத்தை பதிவிட்டு ஏலம் விடும் செயலி – டெல்லி, மும்பை போலீசில் புகார்!

Date:

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி .அதே போல டெல்லியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் தன்னுடைய படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார்.

முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒவைசி எம்.பி.காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியில் மூலம் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. சல்லி டீல்ஸ், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு டீல் ஆஃப்தி டே என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது என்று அந்த செய்தி விவரிக்கிறது,

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...