மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது முறையாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முழுமையாக குணமடையும் வரை, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அலுவலகப் பணிகளை காணொளி மூலம் மேற்கொள்ளப் போவதாகவும், மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி மாதம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.மெக்சிகோவில் இதுவரை சுமார் 41 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.