ராஜகிரிய போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு!

Date:

அதுல்கோட்டை அங்கம்பிடிய வீதி மற்றும் நாவல ராஜகிரிய வீதியை இணைத்து ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் 60 % நிறைவடைந்துள்ளதாகவும் நிர்மாணிப் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை நிறைவு செய்யுமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (29) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்தப் பணிப்புரைகளை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முழு மேற்பார்வையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புக் கூட்டுத்தாபனத்தினால் இரு வழிப்பாதையுடன் கூடிய இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

600 மீற்றர் நீளமும் 10.4 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் புதிய பாலத்திற்கு ரூ.1,698.55 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவில் இரண்டு நடை பாதைகள் அமைக்கப்படும்.

மேலும் அங்கம்பிட்டியிலிருந்து பாலம் நோக்கி 60 மீற்றர் நீள பிரவேச வீதியும், பாலத்தில் இருந்து பாடசாலைக்கான பாதை வரை 40 மீற்றர் நீள பிரவேச வீதியும் அமைக்கப்படும். இப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் சேதமடையாத வகையில் மின் கம்பங்களில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இப் புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாராளுமன்ற வீதி மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நாவலை நோக்கி இலகுவாக செல்லக்கூடியதாக இருப்பதுடன் ராஜகிரிய வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...