வெலிக்கடை சிறைச்சாலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானத்தை நீதிபதிகள் குழாம் எடுத்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 8 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியின்றி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படாத காரணத்தினால் அவரை விடுவித்து விடுதலை செய்ய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது.சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தாலும் ,8 கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.