ஹட்டன் டிக்கோயாவில் 72 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து!

Date:

ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்திலுள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.

15 பேர் சென்ற இப் பேருந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...

சவூதி பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...