இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அந்த அணி 11 ஒருநாள் 8 டெஸ்ட், 11 இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் 20 க்கு 20 ஆசியக் கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் உள்ளடங்குகின்றன.
இலங்கை அணி ,சிம்பாவே ,அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் எதிர்வரும் காலங்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.