அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் வெவ்வேறு பிரிவு சேவைகளாக’ பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அதன் அடிப்படையில் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.