இந்தியாவுடனான  இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Date:

இந்தியாவுடனான  இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 266 ஓட்டங்களையும் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 229 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 240 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. பின்னர் ஆட்டம் தொடங்கியவுடன் தலைவர் டீன் எல்கரும், ராசி வாண்டர் டூசனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்தை பிரிக்க முடியாததால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு படிப்படியாகக் குறைந்தது.

3 வது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் பெற்ற நிலையில் டூசன் விக்கெட்டை முகம்மத் ஷமி கைப்பற்றினார். இதனால், இந்தியாவுக்கு சிறு வெற்றி வாய்ப்பு உருவானது.ஆனால், அதன் பிறகும் எல்கர் மற்றும் தெம்பா பவுமா மீண்டும் ஒரு இணைப்பாட்டத்தை அமைத்தனர்.

67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் 96 ஓட்டங்களும், பவுமா 23 ஓட்டங்களும் எடுத்தனர்.இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1 – 1 என சமநிலையில் உள்ளது.வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...