இலங்கைக்கான துருக்கிய தூதுவர் கெளரவ டிமெட் செகர்சியோக்லு அவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களுக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு இன்று (07) MRCA திணைக்களத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் துருக்கிக்குமிடையில் நிலவும் சுமூகமான இரு தரப்பு உறவுகள் மற்றும் துருக்கி தூதரகத்திற்கும் MRCA திணைக்களத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.