பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணம்!

Date:

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதி மீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அறவிட்ட கட்டணத்தை அறவிடும் வகையில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.அதன்படி, அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிகளை மீறும் அனைத்து பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக பல பகுதிகளில் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...