ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை நீதிமன்றில் நிராகரிப்பு!

Date:

20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்த போதிலும், அது தனது அதிகார எல்லைக்கு உட்பட்டது அல்ல என்பதனால் பிணை உத்தரவை நிராகரித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோருமாறும் நீதிவான் தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்

ஹிஜாஸின் சட்டத்தரணி அவருடைய நலன் கருதி ஏனைய தரப்பினருடன் சமரசம் செய்து கொள்ள இணங்கியதையடுத்து, புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 20 ஆம் தேதி, சட்டமா அதிபர் (ஏஜி) திணைக்களம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது PTA மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...