இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு கொவிட் உறுதி!

Date:

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷிகார் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்களுக்கு கொவிட் தொற்று நேற்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது,

ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், உதவியாளர்கள் சிலருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு முதல் நான்கு பேர் வரை இருப்பார்கள்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வீரர்கள் மூவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மூவரும் ஒருவார காலம் தனிமையிலிருந்து தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அணியுடன் இணைவார்கள்.

இதன் மூலம், தயார்நிலை வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ஷாருக்கான், சாய் கிஷோர் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக வெங்கடேஷ் ஐயர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...