ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!

Date:

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் அனுமதியளித்துள்ளார்.

குறித்த அறிக்கையை இன்றையதினம் (புதன்கிழமை) சபையில் முன்வைத்து உரையாற்றிய சபாநாயகர் சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 அத்தியாயங்களுடன் கூடிய அறிக்கையை நாடாளுமன்ற வாசிகசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் சட்டக்கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்ட காரணங்களால் சாட்சி பதிவுகள் வெளியிடப்படவில்லை என்பதுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கபீர் ஹாசிமுக்கு கோபா தலைவர் பதவி!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...