ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதும் தான் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வாண்டர் லியன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐரோப்பாவில் போர் வருவதற்கு காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் என்றும்,போரால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் துணை நிற்பதாக உறுதியளித்த அவர் ரஷ்யப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து பேசிய பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய நிதிச் சந்தையில் ரஷ்ய வங்கிகளுக்கான வணிகத் தொடர்பை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.