உக்ரைன்-ரஷ்யா போர் Updates: ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றின!

Date:

செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்’ரஷ்ய படைகளின் தாக்குதலுக்குப் பிறகு செர்னோபில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூற முடியாது,’ என்றும் ஐரோப்பாவில் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்’ என்று உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலில் மாஸ்கோ தரை, கடல் மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தியதை அடுத்து, வியாழன் அன்று உக்ரைன் படைகள் மூன்று பக்கங்களிலும் சண்டையிட்ட போது ரஷ்ய படைகள் மின் உற்பத்தி நிலையத்தைக் கைப்பற்றின.

1986 செர்னோபில் வெடிப்பு மனித வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவை நினைவூட்டுகிறது.

ரஷ்யா தொடர்ந்து படையெடுத்தால் மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், 1986 இல் செர்னோபில் வெடிப்பு மனித வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவிற்கு வழிவகுத்தது, செலவு மற்றும் உயிரிழப்பு இரண்டிலும்.

ரஷ்யா தனது படையெடுப்பை தொடர்ந்தால் மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்படும் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

‘எங்கள் பாதுகாவலர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள், அதனால் 1986 இன் சோகம் மீண்டும் நிகழக்கூடாது’ என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...