ஒமிக்ரோன் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி; ஆய்வில் தகவல்!

Date:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய  ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, கொவிட்டினால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கொவிட் தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கொவிட் பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கொவிட்டுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல, ஒமிக்ரோன் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்...

வெனிசுலா விவகாரம் குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன்,...

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது...

எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06)...