நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்: மின்சார சபை அறிவிப்பு

Date:

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும் போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென அந்த சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மாலை அளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை நேற்று பிற்பகல் தேசிய கட்டமைப்புடன் இணைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று பிற்பகல் செயலிழந்த நிலையில் இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல், 130 மெகாவோட் மின்சார இழப்பு களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...