பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கொழும்பில் கையெழுத்து போராட்டம்!

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பில் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டையில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதவற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொழும்பிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை   இந்தக் கையெழுத்து  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தின் நன்மை கருதி அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...