‘போரை நிறுத்து’: உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Date:

இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் பிரஜைகள் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் பிரஜைகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனிய பிரஜைகள், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்து’, ‘போரை நிறுத்து’ மற்றும் ‘ரஷ்யா வீட்டிற்கு செல்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ‘ரஷ்யா தொடங்கிய ‘முழு அளவிலான போர்’ இராணுவம் மற்றும் பொதுமக்களிடையே முதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கோஷமெழுப்பினர்.

தங்கள் குரலை உலகம் கேட்க வேண்டும் என்றும் உக்ரேனிய பிரஜைகள் இதன்போது தெரிவித்தனர். அமைதியான உக்ரைன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரவும் பகலும் இடைவிடாது தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன என்றும் இலங்கையில் வசிக்கும் உக்ரேனியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஷ்ய படைகளை உக்ரைன் எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன என்றும் உலகம் ரஷ்யாவை தீர்க்கமாக தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், இது சர்வதேசத்தின் நேரம் என்றும் இதனை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...