மகளிா் ஒரு நாள் தரவரிசை ஐசிசியினால் அறிவிப்பு!

Date:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒரு நாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

டுபாயில் செவ்வாய்க்கிழமை(08) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் மிதாலி 738 புள்ளிகளையும், மந்தனா 710 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸி. வீராங்கனை அலிஸா ஹீலி 742 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். ஏனைய வீராங்கனைகளான, பெத் மூனி 719, எமி சேட்டா்த்வெயிட் 717 புள்ளிகளுடன் மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனா். பௌலிங்கில் ஆஸி. வீராங்கனை ஜெஸ் ஜோனஸ்ஸன் 773 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 727 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ஆல்ரவுண்டா் தரவரிசையில் ஆஸி. வீராங்கனை எலிஸி பொ்ரி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.இங்கிலாந்தின் நாட் ஷிவா், இந்தியாவின் தீப்தி சா்மா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனா்.

இந்திய மகளிா் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே ஒரு டி20 ஆட்டம் புதன்கிழமை குயின்ஸ்டவுனில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடா்ந்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 12 இல் முதல் ஒருநாள், 15இல் இரண்டாம் ஒருநாள், 18 இல் மூன்றாம் ஒரு நாள், 22 இல் நான்காம் ஒரு நாள், 24 இல் 5 ஆம் ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.

நியூஸிலாந்தில் எதிர்வரும் மாா்ச் – ஏப்ரல் மாதம் ஐசிசி மகளிா் ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையில் இத் தொடா் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...