சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) இன்று காலமானார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
பத்மகுமார இலங்கையின் ஊடகத் துறையில் மற்றும் பத்திரிகையின் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘முல் பிடுவ’ மற்றும் ‘லோக சித்தியம’ ஆகியவற்றில் மிகவும் பிரபலமிக்க ஒருவராவார்.
அவர் லக்பிம பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் லேக் ஹவுஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.
இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.