ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம்- ஜோ பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார். மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்த ஜோ பைடன் மேற்கத்திய நாடுகளிலிருந்து அனைத்து நிதி உதவிகளும் ரஷ்யாவுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேலும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...