ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Date:

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளையதினம் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ஆம் திகதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு இறுதித்தீர்ப்பு வரும் வரை கல்லூரிகளுக்கு மதரீதியான ஆடைகளை அணிந்து வருவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...