அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்ட நடவடிக்கைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவருக்கு இரண்டு தடை உத்தரவுகளை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...